நாட்டை வழி நடத்தும் தகுதி ராகுல் காந்தியிடம் உள்ளது - சிவசேனா சர்டிபிகேட்

விபரமறியாதவர் (பப்பு) என்று பா.ஜ.க.வினரால் அழைக்கப்படும் ராகுல் காந்திக்கு நாட்டை வழிநடத்தும் தகுதி உள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுட் குறிப்பிட்டுள்ளார்.
Published on

விபரமறியாதவர் (பப்பு) என்று பா.ஜ.க.வினரால் அழைக்கப்படும் ராகுல் காந்திக்கு நாட்டை வழிநடத்தும் தகுதி உள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுட் குறிப்பிட்டுள்ளார்.

புனே நகரில் உள்ள சிவசேனா அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சஞ்சய் ரவுட் கூறியதாவது:-  

சரக்கு மற்றும் சேவை வரியை திணித்த பா.ஜ.க. அரசு மீது குஜராத் மக்களுக்கு அளவில்லாத கோபம் உள்ளது. இதனால், இன்று நடைபெறும் முதல்கட்ட குஜராத் சட்டசபை முதல்கட்ட வாக்குப்பதிவில் பா.ஜ.க. கடும் போட்டியை சந்திக்க நேரிடும். நாட்டில் மோடி அலை இல்லை என்பதை குஜராத் தேர்தல் முடிவு விரைவில் வெளிப்படுத்தும்.

கடந்த 2014-ம் ஆண்டு இருந்ததுபோல் விபரமறியாதவராக (பப்பு) தற்போது ராகுல் காந்தி இல்லை. இன்று அவர் நாட்டை வழிநடத்தும் நல்ல தலைவராக முன்னேறியுள்ளார். குஜராத் மக்களுடன் அவர் பழகிய விதம் மற்றும் நாட்டு மக்களுடன் அவர் பழகும் முறையின் மூலம் நாட்டை வழிநடத்த அவர் தயாராகி விட்டதை உணர்த்துகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com