ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை- தி.மு.க.வின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு தொடர்பாக திமுக முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போது, மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர். அதேசமயம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட 23-ம் தேதிவரை இடைக்கால தடை விதித்தனர்.

மேலும் இன்பதுரையின் மனு தொடர்பாக திமுக வேட்பாளர் அப்பாவு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com