டென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து இரண்டாவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
பிவி சிந்து
பிவி சிந்து
Published on

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஒடேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து தென் கொரியாவின் அன் சே யங்கை எதிர்கொண்டார்.

இதில் பிவி சிந்து 14-21, 17-21 என நேர்செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com