கொள்ளை
கொள்ளை

புதுக்கடை அருகே காரில் வைத்திருந்த பணம்-லேப்டாப் திருட்டு

புதுக்கடை அருகே காரில் வைத்திருந்த பணம்-லேப்டாப் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

நாகர்கோவில்:

புதுக்கடை கல்லனந்த தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுஜித் (வயது 28). வியாபாரி.

சம்பவத்தன்று காரில் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் சென்றிருந்தார். பின்னர் அவர் இரவு வீடு திரும்பினார். காரை தனது வீட்டு முன்பு நிறுத்திவிட்டு கேட்டை பூட்டிவிட்டு தூங்கினார்.

பின்னர் அவர் காலையில் எழுந்து பார்க்கும்போது கார் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காரை பார்த்த போது காரில் வைத்திருந்த ரொக்கபணம் ரூ.20 ஆயிரம் மற்றும் லேப்-டாப்பை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸ்டின்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்லங்கோடுகளுக் குழிபாலவிளை பகுதியை சேர்ந்தவர் ஜவகர். இவரது மனைவி ஜெயந்தி (47). இவர் சென்னையில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பும் போது வீட்டின் முன்பக்க கதவின் பட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில் வீடு புகுந்த கொள்ளையன் வீட்டில் இருந்த வெண்கலம், சில்வர் பாத்திரங்கள் உள்பட பல பொருட்களை திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com