இரவில் தண்டவாளங்களில் தூங்கினர்- பஞ்சாப் விவசாயிகள் 2வது நாளாக ரெயில் மறியல்

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் நடத்தி வரும் ரெயில் மறியல் போராட்டம் 2வதுநாளாக நீடிக்கிறது.
ரெயில் மறியல்
ரெயில் மறியல்
Published on

அமிர்தசரஸ்:

மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக செப்டம்பர் 24ம் தேதி முதல் மூன்று நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கம் (கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி) அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று ரெயில் மறியல் போராட்டம் தொடங்கியது. அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மாலை வரை போராட்டம் நடத்திய விவசாயிகள், இரவில் தண்டவாளத்திலேயே தூங்கினர். இன்று காலை மீணடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தண்டவாளத்தில் நடுவில் சிறிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. விவசாய சங்க தலைவர்கள் அதில் அமர்ந்து, மசோதாவை எதிர்த்து உரையாற்றுகின்றனர். 

இரண்டாவது நாளாக போராட்டம் நீடிப்பதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 1ம் தேதி முதல் காலவரம்பற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com