ஈரான் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது

கல்லூரியில் சீட் கிடைக்க படுக்கையை பகிர வேண்டும் என்று கூறி, ஈரான் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ஈரான் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது
Published on

புனே:

ஈரான் நாட்டை சேர்ந்த 31 வயது பெண் புனே கோத்ரூட் பகுதியில் உள்ள பிரபல கல்லூரியில் பி.எச்.டி. படிக்க விரும்பினார். இதைத்தொடர்ந்து, அந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் 50 வயது பேராசிரியரை சமீபத்தில் அணுகி, தனக்கு சீட் கிடைக்க உதவிசெய்யுமாறு கோரினார்.

பி.எச்.டி. பிரிவில் ஒரே ஒரு சீட் தான் இருப்பதாகவும், அதற்கு 2 பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் கூறிய பேராசிரியர், இருப்பினும் சீட் கிடைக்க தான் உதவுவதாக உறுதியளித்தார். அதற்கு கைமாறாக தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

அதோடு அந்த பெண்ணை ஆங்காங்கே தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டார். பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதனால், அதிர்ந்து போன ஈரான் பெண், தனது தோழிகளின் உதவியுடன் உள்ளூர் போலீசில் புகார் செய்தார்.

இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பேராசிரியரை நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com