சகோதரரை தாக்கிய விவகாரம்: தமிழக அமைச்சர் மரிய வில்சன் வழக்கு 4-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

புதுச்சேரி முதலாவது குற்றவியல் கோர்ட்டில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை பெற ஆஜராக உத்தரவிட்ட போதும் அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.
மரிய வில்சன்
மரிய வில்சன்
Published on
Summary

அமைச்சரின் சகோதரர் தரப்பு வக்கீல் பிரவீன் வழக்கை ஐகோர்ட் உத்தரவுப்படி விரைந்து விசாரிக்க அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து வழக்கை வருகிற 4-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட் தள்ளிவைத்தார்.

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் 8.8.2022ல் புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குளோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

புதுச்சேரி முதலாவது குற்றவியல் கோர்ட்டில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை பெற ஆஜராக உத்தரவிட்ட போதும் அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.

ஆஜராகவில்லை

இந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு சேரலாதன் மாகிக்கு மாற்றப்பட்டார். இந்த சூழலில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை. 2-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சந்திரசேகர் இந்த நீதிமன்றத்துக்கு பொறுப்பு வகித்ததால் அவர் விசாரித்தார்.

4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

அப்போது அமைச்சரின் சகோதரர் தரப்பு வக்கீல் பிரவீன் வழக்கை ஐகோர்ட் உத்தரவுப்படி விரைந்து விசாரிக்க அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து வழக்கை வருகிற 4-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட் தள்ளிவைத்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com