அரசு நிதி முறைகேட்டை கண்டித்து தலைமை செயலகம் முற்றுகை

பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ, யு.ஜி.சி. விதிகளுக்கு மாறாக அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.பொறுப்பு முதல்வரான நாள் முதல் ஊழல், முறைகேடு என தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ, யு.ஜி.சி. விதிகளுக்கு மாறாக அப்பதவியில் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பு முதல்வரான நாள் முதல் ஊழல், முறைகேடு என தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறார்.

முதுகலைப் பட்டப் படிப்பு தொடங்குவதாகக் கூறி பல்கலைக்கூட பேராசி ரியர்கள், ஊழியர்கள் சம்பளப் பணம் ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்தை விதிகளை மீறி எடுத்துச் செலவழித்துள்ளார். இவருக்கு ரூ.9 ஆயிரத்து 999 மட்டுமே நிதியைக் கையாள வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளார்.

இது விதிமீறல் மட்டுமல்ல கிரிமினல் குற்றமாகும். இதனால், இவருக்கு வழங்கப்பட்ட நிதி அதிகாரம் பறிக்கப்பட்டது. இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்ட மைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது தலைமைச் செயலர் தலைமையில் இயங்கும் ஊழல் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள், கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இப்புகார் மீது கடந்த மே 18-ந் தேதி சென்னையில் உள்ள சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு ஒரு மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை அளிக்க ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், இதுநாள் வரையில் தலைமைச் செயலர் தலைமையிலான ஊழல் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளும், கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

பொறுப்பு முதல்வர் விதிகளை மீறி தகுதி இல்லாத 8 தற்காலிக உதவிப் பேராசிரியர்களைப் பணியமர்த்தி உள்ளார். எனவே, பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரை பதவி நீக்கவும், 8 உதவி பேராசிரியர்களைப் பணி நீக்கவும் நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலர், கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, வருகிற 4-ந் தேதி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com