புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 80.81 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலை விட 6.29 சதவீதம் ஓட்டுகள் குறைந்துள்ளது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
Published on: 
Summary

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 2-வது இடத்திலும் தி.மு.க. வேட்பாளர் 3-வது இடத்திலும் உள்ளனர்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் விநாயகம், தி.மு.க., சேது செல்வம், இந்திய கம்யூ., சலீம் உட்பட மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கடந்த செவ்வாய்கிழமை அன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதில் 10,056 ஆண் வாக்காளர்கள், 11,695 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 21,756 பேர் வாக்களித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலின் போது தட்டாஞ்சாவடி தொகுதியில் 87.10 சதவீத ஓட்டுகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 80.81 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலை விட 6.29 சதவீதம் ஓட்டுகள் குறைந்துள்ளது.

ஓட்டுபதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை

அதனை தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு மோதிலால் நேரு பாலிடெக்னிக் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணட்டது. அடுத்து மின்னணு ஓட்டு பதிவு எந்திரங்கள் 4 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோக் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் தட்டாஞ்சாவடி தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் தக்கவைத்துள்ளது. . காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் 2-வது இடத்திலும், தி.மு.க. வேட்பாளர் சேது செல்வம் 3-வது இடத்திலும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com