தேர்வில் தோல்வி பயத்தில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தேர்வில் தோல்வி பயத்தில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேர்வில் தோல்வி பயத்தில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை கோரிமேடு இந்திராநகரில் வசிப்பவர் கிருஷ்ண பிரசாத் சர்மா. இவர் ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பிரதீப் சர்மா (வயது17). இவர் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதியிருந்தார்.

இதற்கிடையே பிரதீப் சர்மாவுக்கு தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயம் இருந்து வந்தது. இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு பெற்றோர் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெறுவாய் என ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் பிரதீப் சர்மா விரத்தியுடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு பிரதீப் சர்மா படுக்கை அறைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து சந்தேகமடைந்த பிரதீப் சர்மாவின் தாய் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது அங்கு மின் விசிறியில் பிரதீப் சர்மா துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து கிருஷ்ண பிரசாத் சர்மா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுவை குரும்பாப்பேட் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி பரமேஸ்வரி (52). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் உள்ள அமைதி நகரில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரமேஸ்வரி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரமேஸ்வரி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அப்போது திடீரென மனமுடைந்த பரமேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com