சிக்கன் பிரியாணியில் இரும்பு கம்பி- சமூக வலைதளங்களில் வீடியோ பரவுகிறது

பிரியாணியில் கம்பி கிடந்ததை தெரிவித்த போது கடை நிர்வாகம் முதலில் மறுத்தனர். சுல்தான்பேட்டையில் தரமற்ற உணவு விநியோகம் செய்வதாக வெளியான வீடியோவை தொடர்ந்து, பிரியாணியில் இரும்பு கம்பி கிடக்கும் வீடியோ புதுவையில் வைரலாக பரவி வருகிறது.
இரும்பு கம்பி கிடந்த சிக்கன் பிரியாணி
இரும்பு கம்பி கிடந்த சிக்கன் பிரியாணி
Published on

புதுச்சேரி:

புதுவை 45 அடி சாலையில் பிரபலமான பிரியாணி கடை உள்ளது.

இங்கு தட்டாஞ்சாவடியை சேர்ந்த மைக்கேல் சிக்கன் பிரியாணி வாங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட்ட போது, அதில் பாத்திரம் கழுவும் ஸ்கிரப் கம்பி இருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடைக்கு வந்து உரிமையாளரிடம் முறையிட்டார். கடை உரிமையாளரிடம் அவர் முறையிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் மைக்கேல் கூறுகையில், பிரியாணியில் கம்பி கிடந்ததை தெரிவித்த போது கடை நிர்வாகம் முதலில் மறுத்தனர். பின்னர் சாதாரணமாக மன்னித்து விடுங்கள் என கூறுகின்றனர்.

கம்பி வயிற்றுக்குள் சென்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பிரியாணி கடை பொறுப்பேற்குமா? பிரியாணி சாப்பிடும்போது என்ன உள்ளது? என பார்த்து சாப்பிடுங்கள்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் அளிப்பேன் என்றார். ஏற்கனவே சுல்தான் பேட்டையில் தரமற்ற உணவு விநியோகம் செய்வதாக வெளியான வீடியோவை தொடர்ந்து, பிரியாணியில் இரும்பு கம்பி கிடக்கும் வீடியோ புதுவையில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com