புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!

புதுச்சேரி முழுவதும் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
Chief Minister Vijay -N.Rangasamy
Published on

புதுச்சேரி முதலமைச்சரும் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் (AINRC) தலைவருமான என்.ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

முதலமைச்சர் ரங்கசாமிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் விஜய், அவர் நல்ல உடல்நலனுடனும், நீண்ட ஆயுளுடனும் புதுச்சேரி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். விஜய்யின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அவருடன் சில நிமிடங்கள் நலம் விசாரித்துப் பேசினார்.

தலைவர்கள் வாழ்த்து:

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டுப் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் அவருக்கு நேரில் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி முழுவதும் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com