புதுவையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் மெழுகுவத்தி ஏற்றி போராட்டம்னைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலக்குழு உறுப்பினர் முரளி, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவாஜி சிலை அருகில் மெழுகுவத்தி ஏற்றும் போராட்டம் நடந்த காட்சி.
சிவாஜி சிலை அருகில் மெழுகுவத்தி ஏற்றும் போராட்டம் நடந்த காட்சி.
Published on

புதுச்சேரி:

டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், பா.ஜனதா எம்.பி பூஷன் சரண் சிங்கை போக்சோ சட்டப்படி கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் சார்பில் சிவாஜி சிலை அருகில் மெழுகுவத்தி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தின் புதுவை மாநிலத் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் சுசி கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் லெனின் துரை, ஏ.ஐ.யு.டி.யு.சி மாநில செயலாளர் சிவக்குமார், இணைச்செ யலாளர் சிவசங்கர், ஹரிஷ், சத்யா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தேவசகாயம், பெரியாரின் பொதுவுடமை கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலக்குழு உறுப்பினர் முரளி, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com