மாநில அளவிலான பாக்ஸிங் போட்டி

போட்டிக்கான ஏற்பாடுகளை பாக்ஸிங் சங்க பொதுச்செயலாளர் கோபு செய்து வருகின்றார்.மாநில விளையாட்டு சங்க தலைவர் கராத்தே வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
 பாக்ஸிங் வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்ட காட்சி.
 பாக்ஸிங் வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில பாக்ஸிங் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான பாக்ஸிங் போட்டிகள் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில்   தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

பாக்ஸிங் சங்கத் தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமையில் திரைப்பட நடிகர் தினா துணைத் தலைவர் முத்து கேசவலு ஆகியோர் முன்னிலையில் போட்டிகள் நடந்து வருகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை பாக்ஸிங் சங்க பொதுச்செயலாளர் கோபு செய்து வருகின்றார்.

இந்தப் போட்டிகளில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட பாக்ஸிங் வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளை புதுவை மாநில விளையாட்டு சங்க தலைவர் கராத்தே வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com