புதுவை வீரர்கள் பதக்கங்கள் குவித்து சாதனை

அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்துசாதனை படைத்த வீரர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தேசிய கிக் பாக்ஸிங் போட்டியில்  பதக்கங்களை குவித்து வீரர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்த காட்சி.
தேசிய கிக் பாக்ஸிங் போட்டியில்  பதக்கங்களை குவித்து வீரர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்த காட்சி.
Published on

புதுச்சேரி:

ஜார்க்கண்ட் மாநிலம் ரான்ஜி மாவட்டத்தில் உள்ள தானா சர்வதேச உள்விளையாட்டரங்கத்தில் தேசிய அளவிலான சிறுவர் சிறுமிகள் மற்றும் கேடட் ஆகிய எடை பிரிவிகளில் கிக் பாக்ஸிங் போட்டி நடைபெற்றது. இதில் புதுவை மாநில கிக் பாக்ஸிங் சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் இளங்கோவன் தலைமையில் வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.

இதில் புதுவையை சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் பதக்கங்கள் குவித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த வீரர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இவர்களுடன் புதுவை மாநில அனைத்து விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் சேர்மன் திருவேங்கடம், இந்தியா விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குனர், முத்து கேசவலு, பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், மாநில அனைத்து விளையாட்டு வீரர்களின் நல சங்கத்தின் கவுரத் தலைவர் ஆளவந்தான், தேசிய பயிற்சியாளர்கள் அமிர்தராஜ், மோகன், பிரவீன் குமார், அய்யனார், விநாயகம், ராஜ்குமார், செபஸ்தியன், ராகுல், அபிலாஷ், முகேஷ்லிங்கம், மோகன சந்துரு, அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com