புதுச்சேரியில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்ததுமுன்னதாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
புதுச்சேரியில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Published on

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடந்தது.

இதன் எதிரொலியால், தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

கனமழையால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பு விமர்சனத்துக்குள்ளானது. இதனையடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com