புதுவை ரெயில்கள் ரத்து

ரெயில் புதுவை, விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே திருச்சி மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.
புதுவை ரெயில்கள் ரத்து
Published on

பராமரிப்பு பணிகள் காரணமாக புதுவைக்கு வந்து சேரும் ரெயிலும், புதுவையில் லிருந்து புறப்படும் ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி திருப்பதியிலிருந்து அதிகாலை 4.10க்கு புறப்படும் திருப்பதி- புதுவை மெமு விரைவு ரெயில் வரும் 6, 10 தேதிகளில் விழுப்புரத்துடன் நிறுத்தப்படும். இந்த தேதிகளில் திருப்பதி- விழுப்புரம் சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்படும்.

புதுவையிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு இயக்கப்படும் புதுச்சேரி-சென்னை எழும்பூர் மெமு பயணிகள் ரெயில் விழுப்புரத்திலிருந்து 6, 10ம் தேதிகளில் பிற்பகல் 4.30 மணிக்கு இயக்கப்படும். இந்த ரெயில் புதுவை, விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே திருச்சி மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com