புதுவை- கடலூர் நெடுஞ்சாலையில் பள்ளத்தில் களிமண் கொட்டி மூடிய அவலம்

தார் கிடைக்காமல் இருப்பதாகவும் மழையை காரணம் காட்டியும் பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.
சேதமடைந்த சாலை
சேதமடைந்த சாலை
Published on: 

புதுவை- கடலூர் கிழக்கு கடற்கரை சாலை அரியாங்குப்பத்தில் இருந்து முள்ளோடை வரை சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது.

குண்டும் குழியுமான சாலை

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம் பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் தார் ஊற்றி பழுது பார்க்கப்பட்டது. அதன் பிறகு மற்ற பகுதிகளை சாலையைப் போடுவதற்கு தார் கிடைக்காமல் இருப்பதாகவும் மழையை காரணம் காட்டியும் பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.

பழுது பார்க்கப்படாத பகுதியில் தற்போது பெய்த மழையால் மேலும் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இது சம்பந்தமாக பலரும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து இருந்தனர்.

விபத்து

கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையம் சட்டமன்ற அலுவலகம் எதிரில் உள்ள பள்ளத்திற்கு அந்தப் பகுதியில் இருந்த மண் மற்றும் களிமண்களை கொட்டி மூடியுள்ளனர். நேற்று முன்தினம் பெய்த மழையில் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்கள் இந்த பள்ளத்தில் கொட்டப்பட்டிருந்த மண்ணில் சிக்கி விழுந்தது. இதனால் பைக்கில் வந்தவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸ் நிலையம் அருகில் உள்ள பள்ளத்தில் மண் கொட்டப்பட்டு இருக்கும் இடத்தில் வாகனங்கள் செல்லாதபடி பேரி கார்டு போட்டு தடுத்து உள்ளனர்.

மண்ணைக் கொட்டி பள்ளத்தை மூடல்

விபத்தின் போது இதை பார்த்தவர்கள் பலரும் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் மண்ணைக் கொட்டி பள்ளத்தை மூடுவதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இது சம்பந்தமாக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

X