புதுச்சேரி சிறுமி படுகொலை- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி

புதுச்சேரி சிறுமி படுகொலை- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி

எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Published on

புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமி படுகொலை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், பொதுமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை காலைத்து வருகின்றனர். pondஇதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com