

புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதல் அமைச்சரின் வாகனங்களுக்கு மட்டுமே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த ஆட்சியில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நமச்சிவாயத்திற்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனிடையே சமீபத்திய சட்டசபை தேர்தல் அறிவிப்பையொட்டி போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெற்றப்பட்டது.
பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற நமச்சிவாயம் மீண்டும் அமைச்சராக கடந்த மாதம் பொறுப்பேற்றார். அவருக்கு இதுவரை இலாகா எதுவும் ஒதுக்கவில்லை. இருப்பினும், அவரது காரில் ‘உள்துறை அமைச்சர்’ என்ற பெயர் பலகையுடன் கடந்த ஆட்சியில் இருந்ததை போன்று மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் திடீரென திருப்பப் பெற்றப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கான காரணங்கள் சரியாக தெரியாதநிலையில், இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.