பிரதமர் மோடி காணொளி உரை ஒளிபரப்பு

பிரதமர் மோடி என்னுடைய கிளை வலிமையான கிளை என்ற நிகழ்ச்சியை காணொளி மூலம் உரையாற்றி வருகிறார்ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜனதாவினர் ஒலிபரப்பி வருகிறார்கள்.
உப்பளம் தொகுதி பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி காணொளி உரை ஒளிபரப்பப்பட்ட காட்சி.
உப்பளம் தொகுதி பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி காணொளி உரை ஒளிபரப்பப்பட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

பிரதமர் மோடி என்னுடைய கிளை வலிமையான கிளை என்ற நிகழ்ச்சியை காணொளி மூலம் உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜனதாவினர் ஒலிபரப்பி வருகிறார்கள்.

அதுபோல் உப்பளம் தொகுதி பா.ஜனதா சார்பிலும் பிரதமர் மோடியின் காணொளி நிகழ்ச்சி தொகுதி தலைவர் சக்திவேல் தலைமையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு உப்பளம் தொகுதி பொருப்பாளரும், மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளருமான வெற்றிச்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் தொகுதி

பொதுச்செய லாளர் கவிராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் தெய்வநாயகம், தொகுதி துணைத்தலைவர் போஸ், மாவட்ட செயலாளர் அற்புதழகன், நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, ராஜவேலு, ரகு, விக்னேஷ், மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com