எம்.ஐ.டி. கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

வேலை செய்வதற்கு உண்டான சூழல் எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.முகாமில் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூாரி மேலாண்மை துறை மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
எம்.ஐ.டி. கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்ற காட்சி.
எம்.ஐ.டி. கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில் சென்னை சைடஸ்பெக்டரம் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

முகாமில் சைட்ஸ் பெக்ட்ரம் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவன மனிதவள துறை மேலாளர் ரமேஷ், அதிகாரி ஜோஸ்வின், விற்பனை துறை மேலாளர் கிரிஷ் ஆகியோர் நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல் எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து குழு கலந்துரையாடல் நேர்காணல் மற்றும் வேலைவாயப்பு முகாம் நடந்தது.

மணக்கு விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் தலைமை தாங்கினர்.

கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூாரி மேலாண்மை துறை மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் பேராசிரியர் வைத்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com