மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில்ஹேக் எலைட்-ஹக்கதான் நிகழ்ச்சி

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் வெள்ளிவிழா ஆண்டு தேசிய அளவிலான ஹேக் எலைட் எனும் ஹக்கதான் நிகழ்ச்சி நடைபெற்றது.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் ஹேக் எலைட் எனும் ஹக்கதான் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் ஹேக் எலைட் எனும் ஹக்கதான் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

மதகடிபட்டில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்ச்சியாக மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி தகவல் தொழில் நுட்ப துறை மற்றும் ஏ.ஐ.சி.டி.ஈ. ஐடியா லேப் இணைந்து தேசிய அளவிலான ஹேக் எலைட் எனும் ஹக்கதான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நாடு முழுவதிலிருந்து 29 கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தை சார்ந்த 98 மாணவர் குழு அடங்கிய 417 மாணவர்கள் பங்கேற்றனர். தக்சஷீலா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடா சலபதி, கல்லூரியின் டீன் அறிவழகர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன், தேர்வுக்கட்டுபாட்டாளர் ஜெயக்குமார், வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com