மடுகரை வி.எஸ்.ஆர்.அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை

பிளஸ்2 பொதுத்தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவி நஸ்ரின் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்
பள்ளி முதல்வர் ரீனா முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.
பள்ளி முதல்வர் ரீனா முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.
Published on

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் தொகுதி மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 88மாணவிகள் பிளஸ்2 பொதுத்தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ்2 பொதுத்தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளியில் முதலிடம் பெற்ற மகேஸ்வரி மாணவி 528 மதிப்பெண்களும், இரண்டாம் இடம் பெற்ற மாணவிகள் ஆஷா ஷிபானா 520 மதிப்பெண்களும், தேவஸ்ரீ 520 மதிப்பெண்களும், மூன்றாவதாக மாணவி அபிநயா 518 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். உயிரியல் பாடப்பிரிவில் கிரிஜா மாணவி 100 மதிப்பெண்களும், கணித அறிவியல் பிரிவில் மாணவி நஸ்ரின் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். பள்ளி முதல்வர் ரீனா முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் வசந்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com