அன்பும் கருணையும் மற்றவர்களுக்கு ஒளி வழங்குவதாக அமையட்டும்

முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து செய்திநமது அன்பும் கருணையும் மற்றவர்களுக்கு ஒளியை வழங்குவதாக அமைய வேண்டும்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்து செய்தியில் கூறி யிருப்பதாவது:-

தமிழ் மக்களால் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கார்த்திகை தீபத்திருநாளும் ஒன்றாகும். இந்நாளில், இருள் மற்றும் தீமைகளை நீக்கும் முடிவில்லாத ஒளியின் ஆதாரமான சிவபெரு மானின் அருளாசியைப் பெற வீடுகளிலும் கோவில்களிலும் பிரகாச மான தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.

தீபத்தின் ஒளி எப்படி அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ, அதுபோல் நமது அன்பும் கருணையும் மற்றவர்களுக்கு ஒளியை வழங்குவதாக அமைய வேண்டும்.

கார்த்திகை தீபத்தின் ஒளி உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்து, பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிகாட்டட்டும் என்று கூறி அனைவருக்கும் கார்த்திகை தீப நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com