கர்நாடக அரசை கண்டித்து ஐ.ஜே.கே. போராட்டம்; உருவபொம்மை எரிப்பு

இந்திய ஜனநாயக கட்சியினர் திடீரென மறைத்து வைத்திருந்த கர்நாடக முதல் மந்திரி உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். தட்சிணாமூர்த்தி, சிவராமன், தியாகு, அந்தோணிசாமி, செந்தில், அபிமன்னன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கர்நாடக முதல்  மந்திரி உருவபொம்மையை தீ வைத்து எரித்த காட்சி. 
கர்நாடக முதல் மந்திரி உருவபொம்மையை தீ வைத்து எரித்த காட்சி. 
Published on

புதுச்சேரி:

இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.) சார்பில் இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு, புதுவைக்கு காவிரி நீர் தராத கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக முதல் மந்திரி சித்தராமையாவை கண்டித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநில செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் தியாகு, தட்சிணாமூர்த்தி, சிவராமன், தியாகு, அந்தோணிசாமி, செந்தில், அபிமன்னன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் செய்த இந்திய ஜனநாயக கட்சியினர் திடீரென மறைத்து வைத்திருந்த கர்நாடக முதல் மந்திரி உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த உருவபொம்மையை அணைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com