அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் விடுதிநாள் கொண்டாட்டம்

இயக்குனர் சாய்.இளங்கோவன் பங்கேற்புவிடுதி வளாகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விடுதிநாள் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் பரிசு வழங்கிய காட்சி.
விடுதிநாள் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் பரிசு வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி கரியமாணிக்கத் தில் உள்ள அரசு ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் இயங்கும் அரசு மாணவர் விடுதியில் விடுதி நாள் விழா கொண்டாடப்பட்டது.

விடுதி நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங் கோவன் கலந்து கொண்டார். அவர், விடுதி வளாகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் விடுதி நாள் விழாவை யொட்டி மாணவர்களுக்கு இடையே நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு இயக்குனர் சாய்.இளங்கோவன் பரிசு வழங்கி பாராட்டினார்.

பின்னர் விடுதி மாண வர்களுடன் சேர்ந்து உணவ ருந்தினார். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பாளர்கள் பழனி, வேல்முருகன் லெபாஸ், விடுதி காப்பாளர் ஏழுமலை, ஊழியர் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com