புதுச்சேரியில் 15 செ.மீ. கொட்டி தீர்த்த கனமழை

நகரில் வெள்ளம் பெருமளவு வடிந்துள்ள போதிலும் சில பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளது.
புதுச்சேரியில் 15 செ.மீ. கொட்டி தீர்த்த கனமழை
Published on: 
Summary

கனமழையால் புதுச்சேரி நகரின் இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர், எழில்நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது.

15 செ.மீ. மழை

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெய்ய தொடங்கிய மழை, நேற்று அதிகாலை 5.30 மணி முதல் காலை 11 மணி வரை கொட்டி தீர்த்தது. புதுச்சேரியில் 15 செ.மீ. மழை பதிவானது.

கனமழையால் புதுச்சேரி நகரின் இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், கிழக்கு கடற்கரைச் சாலை, புஸ்ஸி வீதி, செயின்ட் தெரேஸ் வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர், எழில்நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

தண்ணீர் வெளியேற்றம்

நகரில் வெள்ளம் பெருமளவு வடிந்துள்ள போதிலும் சில பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com