தமிழக முதல்-அமைச்சர் விஜய் படம் முன்பு மணமகளுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய் படம் முன்பு மணமகளுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை
Published on

புதுவை வில்லியனூர் தொகுதி தவெக தலைமை நிர்வாகி பிரபு மகள் சவுமியாவிற்கும், கடலூரைச் சேர்ந்த அருண்குமாருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து திருமண நாளும் குறிக்கப்பட்டது.

தனது மகள் திருமணத்தில் பங்கேற்க வருமாறு த.வெ.க தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜயை சந்தித்து பிரபு திருமண அழைப்பிதழ் அளித்தார்.

ஆனால், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தொடர் அரசு பணியால் மற்றும் அரசியல் காரணங்களாலும் திட்டமிட்டபடி அவரால் பிரபு மகள் திருமண விழாவில் நேரில் பங்கேற்க முடியாமல் போனது.

இதனால் திருமணத்தன்று மணமேடையில் தமிழக முதல்-அமைச்சர் விஜயின் பிரம்மாண்ட புகைப்படம் ஒன்றை வைத்தனர். மணமக்கள் மாலை மாற்றி தாலி கட்டும்போதும், பின்னணியில் வேத மந்திரங்கள் முழங்க, கெட்டி மேளம் கொட்ட... ஒட்டுமொத்த நிகழ்வும் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் படத்தின் முன்னிலையில அரங்கேறியது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

இந்த திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com