பிரபல ஓட்டலில் வாங்கிய பர்கரில் கையுறை- வாட்ஸ் அப்பில் வைரலாக பரவும் வீடியோ

பர்கரை பிரித்து பார்த்த பொழுது அதில் நீல நிற கையுறை இருந்தது தெரியவந்தது.ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு வேறு பர்கர் தருவதாக கூறினர்.
நீல நிற கையுறை இருந்த பர்கர்.
நீல நிற கையுறை இருந்த பர்கர்.
Published on

சேதராப்பட்டு:

புதுவை கோரிமேடு அருகே தமிழக பகுதியான பட்டானூர் சர்வீஸ் சாலையில் கே.எப்.சி. ஓட்டல் உள்ளது.

இங்கு திண்டிவனத்தை சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வரும் டேவிட் (வயது 29) மற்றும் இவரது நண்பரும் இந்த ஓட்டலில் பர்கர் வாங்கி உள்ளனர்.

அதை சாப்பிடும்போது அதில் பிளாஸ்டிக் பொருள் தென்பட்டது. உடனே அந்த பர்கர் முழுவதையும் பிரித்து பார்த்த பொழுது அதில் நீல நிற கையுறை இருந்தது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த டேவிட் இதுகுறித்து உடனடியாக ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு வேறு பர்கர் தருவதாக கூறினர்.

அதற்கு டேவிட் வேண்டாம் என கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு வீடியோ எடுத்து புகாரையும் அனுப்பி உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரபல உணவுக்கடையில் சாப்பிடும் தின்பண்டத்தில் கையுறை இருந்தது வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com