கோட்டக்குப்பம் அருகே வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி மீனவரை மிரட்டிய கும்பல்

4 பேரும், சிலம்பரசன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
கோட்டக்குப்பம் அருகே வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி மீனவரை மிரட்டிய கும்பல்
Published on: 
Summary

தீபாவளிக்கு வாங்கிய பட்டாசு மருந்தை பயன்படுத்திநாட்டு வெடிகுண்டு தயாரித்து, சிலம்பரசன் வீட்டின் முன்பு வீசினர்.

புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (36). மீனவரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மது போதையில் இருந்த சிலம்பரசன், சஞ்சய்யின் குடும்பத்தை தவறாக பேசியுள்ளார். அதில் சஞ்சய்க்கு, சிலம்பரசன் மீது மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு வீச்சு

இந்நிலையில் நேற்று முன்தினம், சஞ்சய் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த அஜீத், அன்பழகன் மற்றும் சிறுவனுடன் மது அருந்தியுள்ளனர். அப்போது 4 பேரும், சிலம்பரசன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மிரட்டல்

இதையடுத்து இரவு தீபாவளிக்கு வாங்கிய பட்டாசு மருந்தை பயன்படுத்திநாட்டு வெடிகுண்டு தயாரித்து, சிலம்பரசன் வீட்டின் முன்பு வீசினர். சத்தம் கேட்டு வெளியே வந்த சிலம்பரசனை சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் தடி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து சிலம்பரசன், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, பிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்த சஞ்சய் (24), அஜித் (20), அன்பழகன் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X