மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: முதலமைச்சர் ரங்கசாமியிடம் கண்ணீருடன் கதறிய உறவினர்கள்

10-ந்தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு.விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் உறுதி.
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: முதலமைச்சர் ரங்கசாமியிடம் கண்ணீருடன் கதறிய உறவினர்கள்
Published on

புதுச்சேரி:

நாகப்பட்டினம் கோடியக்கரை அருகே விசைப்படகில் மீன் பிடித்த காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.

துப்பாக்கி சூட்டில் காரைக்கால் கிளிஞ்சல் மேடு பகுதியை சேர்ந்த செந்தமிழ் மற்றும் நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த பாபு என்ற 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை 10-ந்தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ பஞ்சாயத்து மற்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் புதுச்சேரி வந்து முதலமைச்சர் ரங்கசாமி, மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரை சந்தித்தனர்.

அப்போது மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ரங்கசாமி காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com