த.வெ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் களம் இல்லை- சண்முகம் பேட்டி

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளிலும் செயலற்ற தன்மையில் தேர்தல் ஆணையம் உள்ளது.
Shanmugam
Published on: 
Summary

பொதுத்தேர்தலில் பிரசாரம் அறிவித்து சென்றதை விட விஜய் ரத்து செய்த பிரசாரமே அதிகம். இன்று மதுராந்தகத்தில் 39 இடங்கள் உள்பட தெருதெருவாக செல்கிறார். த.வெ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் களம் இல்லை. போட்டி கடுமையாக உள்ளதால் முதலமைச்சர் விஜய் தெருதெருவாக செல்கிறார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலர் சண்முகம் இன்று புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பணப்புழக்கம்

புதுச்சேரி முன்னேற்றத்துக்கு முதலமைச்சர் ரங்கசாமி ஏதும் செய்யவில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றக்கூட அவர் செயல்புரியவில்லை. இடதுசாரிகள்தான் மக்கள் பிரச்சினைகளை சட்டசபையில் எழுப்புவார்கள.

தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் செயல்படவிலலை. எந்த தேர்தல் அதிகாரிகளையும் தொகுதியில் பார்க்க வில்லை. இடைத்தேர்தலில் பணப்புழக்கம், விதிமீறல் இருக்கும் என அறிந்தும் செயல்படவில்லை. தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளிலும் செயலற்ற தன்மையில் தேர்தல் ஆணையம் உள்ளது.

தவெக

இதை பயன்படுத்தி த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. அணி பணம் விநியோகத்தை செய்வதை மக்களே சொல்கிறார்கள். பணம் தராத ஒரே கட்சி கம்யூனிஸ்டுகள் தான். இதர 3 அணிகளும் தயக்கம் அச்சம் இன்றி பணம் விநியோகத்தில் ஈடுபடுகின்றனர்.

விஜய்

தூய சக்தி நாங்கள் தான் என தமிழக முதலமைச்சர் விஜய் சொல்வதற்கு நேர் எதிராக வாக்காளர்களுக்கு பணம் தரப்படுகிறது. இது தூய சக்தி அடையாளத்தை அழிக்கிறது. இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.

பொதுத்தேர்தல் பிரசாரம்

பொதுத்தேர்தலில் பிரசாரம் அறிவித்து சென்றதை விட விஜய் ரத்து செய்த பிரசாரமே அதிகம். இன்று மதுராந்தகத்தில் 39 இடங்கள் உள்பட தெருதெருவாக செல்கிறார். த.வெ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் களம் இல்லை. போட்டி கடுமையாக உள்ளதால் முதலமைச்சர் விஜய் தெருதெருவாக செல்கிறார்.

பொறுப்பற்ற முறையில் ராஜிநாமா செய்ததால் வேட்பாளர்களை விரட்டி அடிப்பது அதிகமாக உள்ளது. நெறிமுறையற்ற செயலால் த.வெ.க.வால் திணிக்கப்பட்ட இடைதேர்தல் இது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com