புதுச்சேரி விடுதலை நாள் விழா: தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய காங்கிரஸ் எம்.பி.

புதுச்சேரி விடுதலை நாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார்.
புதுச்சேரி விடுதலை நாள் விழா: தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய காங்கிரஸ் எம்.பி.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி விடுதலை நாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார். அப்போது தேசியக்கொடி தலைகீழாக (பச்சை நிறம் மேல்புறமாக இருந்தது) ஏற்றப்பட்டது தெரியவந்தது.

இதைப்பார்த்து தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து முக்கிய நிர்வாகிகளிடம் சுட்டிக்காட்டியதும் அவசர அவசரமாக கொடியை இறக்கி, சரிசெய்தபின் மீண்டும் வைத்திலிங்கம் ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com