அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு - தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.வாக பதவியேற்கும் நிகழ்ச்சி சட்டமன்ற வளாகத்தில் சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு
Published on: 
Summary

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அசோக் ஆனந்த், சட்டமன்ற வளாகத்தில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார். தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்ற போது தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 11 வேட்பாளர்களுடன் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

பதவியேற்பு

இதில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட அசோக் ஆனந்த் அமோக வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.வாக பதவியேற்கும் நிகழ்ச்சி சட்டமன்ற வளாகத்தில் சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அசோக் ஆனந்த் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தற்காலிக சபாநாயகர் அன்பழகனிடம் வழங்கினார். இதனையடுத்து தற்காலிக சபாநாயகர் அன்பழகன் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் அசோக் ஆனந்த்திற்கு எம்.எல்.ஏ. பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அசோக் ஆனந்த்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். புதுச்சேரி சட்டசபைக்கு 3-வது முறையாக அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com