

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரியில் இன்று நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
புதுவை காவல்துறையின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
இந்நிலையில், புதுவை காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது விழாவுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அமைச்சர் அமித்ஷாவுக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
புதுச்சேரி கோரிமேட்டில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை அமித்ஷா வழங்கி கவுரவிக்கிறார்.
புதுவையில் அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அமித்ஷா தேசியக்கொடி பேரணியை தொடங்கி வைக்கிறார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி புதுச்சேரியில் டிரோன் பறக்கத்தடை, போக்குவரத்தில் மாற்றம், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.