தேசிய செஸ் போட்டிக்கு தகுதிபெற்று ஆல்பா பள்ளி மாணவி சாதனை

7-ம் வகுப்பு மாணவி ஹன்சிகா வெள்ளிப்ப தக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் பாராட்டினார்.
தேசிய செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிக்கு ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குனர் தனதியாகு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.
தேசிய செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிக்கு ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குனர் தனதியாகு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.
Published on

புதுச்சேரி:

மாநில அளவிலான செஸ் போட்டி புதுச்சேரியில் நடந்தது. இதில் சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் புதுச்சேரி ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி ஹன்சிகா வெள்ளிப்ப தக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் ஆந்திராவில் நடைபெற உள்ள 36-வது தேசிய செஸ் போட்டி, டெல்லியில் 67-வது மாநில அளவில் நடைபெறும் போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

மாநில அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவி ஹன்சிகாவுக்கு ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியின்போது மாணவியின் பெற்றோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com