மணக்குள விநாயகர் கோவிலில் அ.தி.மு.க.வினர் தங்கதேர் இழுத்து வழிபாடு

புதுவையில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.பழனிசாமி நீடூழி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்து, 1008 தேங்காய் உடைத்து தங்கதேர் இழுத்து வழிபட்டனர்.
மணக்குள விநாயகர் கோவிலில் அ.தி.மு.க.வினர் தங்கதேர் இழுத்து வழிபட்டனர்.
மணக்குள விநாயகர் கோவிலில் அ.தி.மு.க.வினர் தங்கதேர் இழுத்து வழிபட்டனர்.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று தலைமை கழகத்தில் கொடியேற்றி பட்டாசு வெடித்தும், எம்.ஜி.ஆர் சிலை ஜெயலலிதா உருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்கள். ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து மணக்குள விநாயகர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி நீடூழி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்து, 1008 தேங்காய் உடைத்து தங்கதேர் இழுத்து வழிபட்டனர்.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சுப்பையா சாலையில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயத்திலும், முல்லா வீதியில் உள்ள ஹஜ்ரத் சையத் அஹமத் மவுலா சாஹீப் வலியுல்லாஹ் தர்காவிலும் பிரார்தனை நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்எல்ஏக்கள் பாஸ்கர், ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாகமணி, பி எல் கணேசன், வி.கே. மூர்த்தி, காந்தி, குமுதன், மணவாளன், , நகர கழக செயலாளர்கள் அன்பழக உடையார், சித்தானந்தம், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம் ஜி ஆர் மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமிஉட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாமுத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள திருக்குறள் மணிக்கூண்டு அருகே புதுவை மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மாநில கழக இணை செயலாளர் காசிநாதன், மாநில கழக இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், தொகுதி கழக செயலாளர் பழனிசாமி, கோபால், வில்லியனூர் மணி, கஜேந்திரன், நகர கழக செயலாளர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மோகன், மாநில வர்த்தக அணித் தலைவர் செல்வம்மாநில மீனவர் அணி துணை செயலாளர் விஸ்வநாதன், மாநில சிறுபாண்மையினர் துணை தலைவர் அந்துவான், இளைஞர் அணி இணை செயலாளர் கன்னியப்பன், அஜய், தொகுதி கழக இணை செயலாளர் தனலட்சுமி மற்றும் நிர்வாகிகள் பரமசிவம், ஜெயபால், பாண்டு, ஷாஜகான், குப்பன், மண்ணாங்கட்டி, முனியாண்டி, வாசு, எத்திராஜ், பிரபா, நாடாராஜ் ஆறுமுகம், வார்டு செயலாளர் வினோத்குமார், விநாயகமூர்த்தி, பச்சையப்பன், முரளிதரன், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com