அ.தி.மு.க. சார்பில் ஏழைகளுக்கு நலதிட்ட உதவி

அன்பழகன் வழங்கினார்கண்ணம்மா தோட்டம் ரைஸ் மில் எதிரில் பாண்டுரங்கனின் உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
மறைந்த அ.தி.மு.க. அவை தலைவர் பாண்டுரங்கன் நினைவு தினத்தையொட்டி மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் முன்னிலையில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன்  பெண்களுக்கு நலதிட்ட உதலி வழங்கினார்.  
மறைந்த அ.தி.மு.க. அவை தலைவர் பாண்டுரங்கன் நினைவு தினத்தையொட்டி மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் முன்னிலையில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பெண்களுக்கு நலதிட்ட உதலி வழங்கினார்.  
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தந்தையும், புதுவை மாநில அ.தி.மு.க. முன்னாள் அவைத் தலைவருமான பாண்டுரங்கனின் 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதனையொட்டி அரியாங்குப்பம் தொகுதி அருந்ததிபுரம் கண்ணம்மா தோட்டம் ரைஸ் மில் எதிரில் பாண்டுரங்கனின் உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இங்கு புதுவை மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமையில் மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பாண்டுரங்கன் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதன் தொடர்ச்சியாக 1000-க்கும் மேற்ப்பட்ட ஏழைகளுக்கு சேலை உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப் பட்டது.

நிகழ்ச்சியில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், திருநாவுக்கரசு.மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில துணை செயலாளர்கள் பி.எல் கணேசன், எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, , காந்தி,

உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன்,

மாநில இலக்கியணி செயலாளர் ராமசாமி,மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பரசுராமன், மாநில இலக்கியணி துணை தலைவர் தட்சணாமூர்த்தி, தொகுதி செயலாளர்கள் ராஜா, பாஸ்கரன், சிவக்குமார், நடேசன், சம்பத், கருணாநிதி, கமல்தாஸ், வேலவன், கோபால், குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் பாலன் நாக.லோகநாதன்,

உழவர்கரை நகர அவைத் தலைவர் டாக்டர் கணேஷ் , உழவர்கரை நகர முன்னாள் துணை செயலாளர் விமலா ஸ்ரீ, மாநில மாணவர் அணி முன்னாள் பொருளாளர் பார்த்தசாரதி, தொகுதி தலைவர்கள் ராஜேந்திரன், மூர்த்தி, உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com