காரைக்காலில் மில் தொழிலாளி விபத்தில் பலி

மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பினார்.மேல்சிகி ச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப்பட்டார்.
காரைக்காலில் மில் தொழிலாளி விபத்தில் பலி
Published on

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது56). தனியார் மில் தொழிலாளியான இவர், கடந்த 4-ந் தேதி, சொந்த வேலை காரணமாக, காரைக்கால் நகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பு ம்போது, பிள்ளைத்தெ ருவசல் மின் நிலையம் அருகே சாலையில் ஆடு குறுக்கே போனதால், ஆட்டின் மீது மோதி, தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்தார். காரை க்கால் அரசு ஆஸ்பத்ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ட்ட சிவக்குமார், மேல்சிகி ச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப்பட்டார். அங்கு 10 நாள் சிகிச்சையில் இருந்த சிவக்குமார், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து அவரது உறவினர் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com