212 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

புதுவையில் 2 ஆயிரத்து 494 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப் பட்டது.புதிதாக 212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவையில் 2 ஆயிரத்து 494 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

புதுவையில் 176, காரைக்காலில் 35, ஏனாமில் ஒருவர் என புதிதாக 212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 21, காரைக்காலில் 3, ஏனாமில் ஒருவர் என 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் ஆயிரத்து 63, காரைக்காலில் 172, ஏனாமில் 14, மாகியில் 2 பேர் என ஆயிரத்து 251 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.புதுவையில் 143, காரைக்காலில் 6, ஏனாமில் 7 பேர் என 156 பேர் சிகிச்சையில் குணம டைந்தனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 963 ஆக உள்ளது.

புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 68 ஆயிரத்து 679 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com