புதுவை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- முதியவர் கைது

புதுவை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவரை போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
புதுவை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- முதியவர் கைது
Published on

சேதராப்பட்டு:

புதுவை சாரம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 60). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகள் வீடு புதுவை அருகே தமிழக பகுதியான பட்டானூர் கலைவாணர் நகரில் உள்ளது.

கலைவாணன் அடிக்கடி மகள் வீட்டுக்கு சென்று தங்கி இருப்பது வழக்கம். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி டியூசன் சென்டருக்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது கலைவாணன் சாக்லெட் தருவதாக அந்த சிறுமியை அழைத்து பாலியல் தொந்தரவு செய்தார்.

இதுபற்றி அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஆரோவில் போலீசில் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் விசாரணை நடத்தினார்.

பின்னர் அவரது அறிவுறுத்தலின்பேரில் கோட்டக்குப்பம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலைவாணனை கைது செய்தார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கலைவாணனை கடலூர் ஜெயிலில் அடைத்தனர். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com