புதுச்சேரி மாநில நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணை

புதுச்சேரி மாநில நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் கூறினர்.
புதுச்சேரி மாநில நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணை
Published on

சென்னை:

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கு நியமன உறுப்பினர்களாக அம்மாநில பி.ஜே.பி. தலைவர் சாமிநாதன், கல்வியாளர் செல்வகணபதி, தொழிலதிபர் சங்கர் ஆகியோரை நியமிக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநில அரசை கலந்தாலோசிக்காமல் மூன்று உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், சென்னை ஐகோர்ட்டில், ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்ட ஐகோர்ட்டு, விசாரணையை ஜூலை 5-ந்தேதிக்கு தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில், மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்து கொள்ள லட்சுமி நாராயணன் தரப்பில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று முறையிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை வழக்கம் போல் வரும் 5-ந்தேதி (நாளை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com