புதுவையில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- உடற்கல்வி ஆசிரியர் கைது

புதுவையில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அரசு பள்ளிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுவையில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- உடற்கல்வி ஆசிரியர் கைது
Published on

புதுச்சேரி:

புதுவை தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் சேவியர்.

இவர் அங்கு 4-ம் வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி அங்கு பணிபுரியும் ஆசிரியைகள் 2 பேரிடம் புகார் தெரிவித்தார். ஆனால், அவர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்து வந்த உடற்பயிற்சி ஆசிரியர் குறித்து தனது பெற்றோரிடம் மாணவி புகார் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் தெரிவித்தனர்.

உடனே அவர்கள் விரைந்து செயல்பட்டு இதுகுறித்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த உடற்பயிற்சி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இது தொடர்பாக கோரி மேடு போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் நல குழுவினர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உடற்பயிற்சி ஆசிரியர் சேவியரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறையிலும் புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உடற்கல்வி ஆசிரியர் சேவியர், இந்த சம்பவம் குறித்து தெரிந்தும் அதனை மூடி மறைக்க முயன்ற 2 ஆசிரியைகளையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த சம்பவம் அரசு பள்ளிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com