இம்ரான்கான் கட்சியின் உறுப்பினர் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக தேர்வு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக இம்ரான்கான் கட்சியை சேர்ந்த உஸ்மான் பஸ்தார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #UsmanBuzdar
இம்ரான்கான் கட்சியின் உறுப்பினர் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக தேர்வு
Published on

லாகூர்:

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைத்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக இம்ரான்கான் கட்சியை சேர்ந்த உஸ்மான் பஸ்தார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மொத்தமுள்ள 371 வாக்குகளில் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த உஸ்மான் பஸ்தாருக்கு ஆதரவாக 186 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட நவாஸ் ஷரீப் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஹம்சா ஷெபாசுக்கு ஆதரவாக 159 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, பஞ்சாப் மாகாணத்தின் முதல் மந்திரியாக உஸ்மான் பஸ்தார் விரைவில் பதவியேற்க உள்ளார். #UsmanBuzdar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com