மகாராஷ்டிரா மாநில சட்டசபை நாளை காலை 8 மணிக்கு கூடுகிறது

மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் முதல் கூட்டம் நாளை காலை 8 மணிக்கு கூட்டுவதற்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டு உள்ளார்.
ஆளுநரை சந்தித்த் காளிதாஸ்
ஆளுநரை சந்தித்த் காளிதாஸ்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் மந்திரி பதவியை பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல் மந்திரி பதவியை தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் காளிதாஸ் இடைக்கால சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் முதல் கூட்டத்தை நாளை காலை 8 மணிக்கு கூட்டுவதற்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டு உள்ளார்.

இடைக்கால சபாநாயகராக பதவியேற்ற காளிதாஸ் கொலம்ப்கர், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com