விபத்து
விபத்து

விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

காரமடை அருகே மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

காரமடை:

தூத்துக்குடியை சேர்ந்தவர் மகேஷ்குமார்(வயது42). இவர் பெரியநாயக்கன் பாளையம் அடுத்த வீரபாண்டி பிரிவில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்றார்.

காரமடை அருகே சென்றபோது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த மினிவேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com