கோவையில் மத்திய அரசு அச்சகத்தை மூடக்கூடாது: பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு அச்சகங்களை இணைக்கவும், அவற்றை நவீனப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகம் மூடப்பட்டுள்ளது.
இந்த அச்சகம் 132.7 ஏக்கரில் அமைத்துள்ளது. திறமையான தொழிலாளர்கள் உள்ளனர். அதனால் இங்கு அடுத்த 4 ஆண்டுகள் வேலைக்கான ஆர்டர்கள் உள்ளன. எனவே இந்த அச்சகத்தை மூடக்கூடாது. தொடர்ந்து நடத்த வேண்டும்.
கர்நாடகம், கேரளா மாநிலங்களில் உள்ள அச்சகத்தை கோவையுடன் இணைத்து ஒரே அச்சகமாக மாற்றலாம். அதன் மூலம் தென் இந்தியாவில் ஒரே மத்திய அரசு அச்சகமாக அது இயங்கும்.
எனவே தாங்கள் இதில் தலையிட்டு மத்திய அரசு அச்சகம் கோவையில் தொடர்ந்து இயங்க வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
