ஜனாதிபதி தேர்தல் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளுக்கு இடையே நடக்கும் யுத்தம்: சோனியா காந்தி கருத்து

நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தல் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளுக்கு இடையே நடக்கும் யுத்தம் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளுக்கு இடையே நடக்கும் யுத்தம்: சோனியா காந்தி கருத்து
Published on

புதுடெல்லி:

புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 17-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் போட்டியிடுகிறார்.

இவருக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ராஷ்டிரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் தி.மு.க. உள்பட 17 கட்சிகள் ஆதரவு அளிக்கிறது.

மீராகுமார் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம்யெச்சூரி, உள்பட 50 எம்.பி.க்கள் முன் மொழிந்து கையெழுத்திட்டனர்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நிகழ்வு முடிந்த பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,”எங்களைப் பொறுத்தவரை இந்த தேர்தல் சித்தாந்தம் மற்றும் கொள்கை, உண்மைகளுக்கு இடையே நடக்கும் யுத்தம். இதில் நாங்கள் வென்றே தீருவோம்.” எனத் தெரிவித்தார்.

வெளிநாட்டில் தற்போது ஓய்வில் இருக்கும் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ,” மீராகுமாரை எங்களது வேட்பாளராக கொண்டதற்கு பெருமைப்படுகிறோம். பிரிவினைவாத சித்தாந்தங்களுக்கு எதிராக நின்று நாடு மற்றும் மக்களுக்கு அவர் எடுத்துக்காட்டாய் திகழ்வார்” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com