வன்முறையால் காயமடைந்த உலகத்தை ஏசுவின் போதனைகள் குணப்படுத்தும் - ஜனாதிபதி கிறிஸ்துமஸ் வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், வன்முறை மற்றும் குரோதத்தால் காயமடைந்த உலகத்தை ஏசுவின் போதனைகள் குணப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
Published on

புதுடெல்லி:

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியா மற்றும் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்முறை மற்றும் குரோதத்தால் காயமடைந்த உலகத்தை ஏசுவின் போதனைகள் குணப்படுத்தும்.

அன்பு, இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியைப் பின்பற்ற மனிதகுலத்திற்கு ஒரு உத்வேகமாக இருந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுகிறோம் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com